உலகம்
Typography

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு மேற்கே 70 km தொலைவில் அமைந்துள்ள பிடிங்குஸன் என்ற கிராமத்தில் உள்ள வாத்துப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது கண்டறியப் பட்டதை அடுத்து அங்கு 1 km சுற்றளவிலுள்ள 2 பண்ணைகளில் இருந்து 190 000 வாத்துக்கள் அழிக்கப் பட்டுள்ளன.

 

இப்பண்ணைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய பின் குறித்த வாத்துக்களுக்கு H5N8 என்ற பறவைக் காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதைவிட 3 km சுற்றளவில் அமைந்துள்ள 3 பண்ணைகள் சுகாதாரத் துறையால் தீவிர கண்காணிப்புக்குக் கொண்டு வரப்பட்டதுடன் 10 km சுற்றளவில் உள்ள பண்ணைகளில் இருந்து வாத்து முட்டையோ அல்லது அதன் இறைச்சியையோ கொண்டு செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னைய பறவைக் காய்ச்சல் போன்றல்லாது H5N8 என்ற வைரஸ் மனிதர்களுக்கு அதிக தீங்கை ஏற்படுத்தாது என்று சொல்லப் பட்டுள்ளது. 2003 இல் முதன் முறை பறவைக் காய்ச்சல் நோய் கண்டு பிடிக்கப் பட்ட போது நெதர்லாந்தில் 3 கோடி பறவைகள் கொல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது, மேலும் அவ்வருடம் இந்த வைரஸ் பாதித்ததால் 420 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன் 2013 ஆம் ஆண்டும் H7N9 என்ற இன்னொரு வகை பறவைக் காய்ச்சலுக்கு 200 இற்கும் மேற்பட்டோர் பலியானதாகவும்  உலக சுகாதாரத் தாபனம் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்