உலகம்
Typography

 

கிழக்க அலெப்போவில் சிரிய அரசு மற்றும் ரஷ்ய கூட்டுப் படைகளின் கடும் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சிரிய கிளர்ச்சிப் படையினர் 5 நாள் யுத்த நிறுத்தத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கிழக்கு அலெப்போவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தாக்குதல்களை எதிர்நோக்கி வரும் நிலையில் அங்கிருக்கும் குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்குமே இந்த அவகாசம் தேவைப் படுவதாக கிளர்ச்சிப் படையினர் அறிவித்துள்ளனர்.

 

கிழக்கு அலெப்போவில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் அங்கு உடனே யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப் படுவது அவசியம் எனவும் சர்வதேசமும் ஐ.நா சபையும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஈராக்கின் மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தை ஒன்றில் அமெரிக்க தலைமையிலான கூட்டணி நாடுகள் தவறுதலாக மேற்கொண்ட வான் தாக்குதலில் பல பெண்களும் குழந்தைகளும் உட்பட 63 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்த வான் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என இதுவரை தெரியவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்