உலகம்
Typography

டிசம்பர் 27 ஆம் திகதி அமெரிக்காவில் 2 ஆம் உலக யுத்தத்தின் போது ஜப்பானால் மோசமாகத் தாக்கப் பட்ட பேர்ல் ஹார்பர் என்ற துறைமுகத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இணைந்து ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே விஜயம் செய்யவுள்ளார்.

1951 ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமராகப் பதவி வகித்த ஷிகேரு யோஷிடா முதன்முறையாக ஏனைய நட்பு நாடுகளுடன் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் போது பேர்ல் ஹார்பருக்கு சென்றிருந்தார். இதனால் பேர்ல் ஹார்பருக்கு விஜயம் செய்யவுள்ள 2 ஆவது ஜப்பான் பிரதமராகவே சின்ஸோ அபே பெயர் பெறுகின்றார்.

1941 ஆம் ஆண்டு 2ஆம் உலக யுத்தத்தின் போது அமெரிக்காவின் கப்பற் படைத் தளமான பேர்ல் ஹார்பர் ஜப்பானால் மோசமாகத் தாக்கப் பட்டதாலேயே ஜப்பானில் அமெரிக்கா தனது இரு அணு குண்டுகளை வீசி பேரழிவை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேர்ல் ஹார்பர் தாக்கப் போட்ட போது கொல்லப் பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் அமெரிக்க ஜப்பான் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்குமாகவே தனது விஜயம் அமையவுள்ளது என அபே தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்