உலகம்
Typography

கிழக்கு அலெப்போவில் சிரிய படைகளும் ரஷ்ய வான் படையும் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

போர்க்களத்தில் சிக்கியிருக்கும் கிட்டத்தட்ட 8000 மக்களும் காயமுற்றவர்களும் வெளியேறவென இந்த யுத்த நிறுத்தத்துக்குத் தாமும் சிரியப் படைகளும் இணங்கியிருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

4 வருடங்களுக்கும் மேலாக கிளர்ச்சியாளர் வசமிருக்கும் கிழக்கு அலெப்போவின் 3/4 பங்கினை சிரியப் படைகள் அண்மையில் கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதேவேளை சிரியா மற்றும் ஈராக்கில் கடந்த 3 வருடங்களுக்கும் அதிகமாக ISIS தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகள் தமது தாக்குதலால் அங்கு பதுங்கியிருந்த கிட்டத்தட்ட 50 000 தீவிரவாதிகள் கொல்லப் பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால் இத்தகவலை கண்காணிப்பு அமைப்புக்களும் ISIS இயக்கமும் உறுதிப் படுத்தவில்லை என்பதுடன் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் குண்டு வீச்சில் குறைந்த பட்சம் 2000 பொது மக்கள் வரை பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்