உலகம்
Typography

சாலமன் தீவுகளை வெள்ளிக்கிழமை அதிகாலை 4:38 மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த 7.7 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்ட போதும் அது மீளப் பெறப்பட்டதுடன் மிக மோசமான பாதிப்பு எற்பட்டதாகத் தகவல் இல்லை. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் மிக அதிகமாக இருந்தாலும் இதைத் தொடர்ந்து 6.5 ரிக்டரில் தொடர் அதிர்வு ஏற்பட்ட போதும் அதிர்ஷ்ட வசமாகவே சாலமன் தீவுகள் இப்பூகம்பத்தில் இருந்து தப்பியிருப்பதாகக் கூறப்படுகின்றது. USGS எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு திணைக்களத்தின் பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையத்தால் மிக வலிமையான சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டதால் பொது மக்கள் அச்சமடைந்து உயர்வான நிலப்பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

மேலும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டும் கட்டடங்கள் சேதம் அடைந்தும் உள்ளன. பப்புவா நியூ கினியாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள சாலமன் தீவுகளில் கிட்டத் தட்ட 500 000 மக்கள் வசித்து வருகின்றனர். 2007 ஆம் ஆண்டு 8 ரிக்டரில் ஏற்பட்ட பூகம்பம் 10 மீட்டர் உயரமுடைய சுனாமி அலைகளை எழுப்பியதுடன் 52 பேரின் உயிரைக் குடித்து இருந்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் தமது வீடுகளையும் இழந்திருந்தனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்