உலகம்
Typography

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த கபர்டினோ என்ற நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான சவிதா வைத்தியநாதன் என்பவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

19 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்திருந்த இவர் பாடசாலை ஆசிரியர், வங்கி அதிகாரி போன்ற முக்கிய பதவிகளை வகித்த பின்னரே கபர்டினோவின் மேயராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார். மிகுந்த சமூக அக்கறையும் கொண்டவராக சித்தரிக்கப் படும் இவர் இரு நாட்களுக்கு முன்பு கபர்டினோ மேயராகப் பதவியேற்றுக் கொண்டார்.

ஒரு வெளிநாட்டவர் என்றும் பாராது தன்னை மேயராகத் தேர்வு செய்த மக்களுக்கு நன்றி சொல்வதாகவும் தனக்கு இந்த அந்தஸ்து கிடைத்ததைப் பெருமையாக நினைப்பதாகவும் சவிதா தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்