உலகம்
Typography

துருக்கியின் ரஷ்ய தூதுவர் ஆண்றோ கார்லோஃப் நேற்று கலைக்கூட நேரடி ஒளிபரப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றத் தொடங்கியிருந்த போது, சிரியாவின் அலெப்போ நகர் குறித்த தகவலுடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய ஒருவர் காலோஃபை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார். இக்காட்சி காணொளிகளில் நேரடியாக பதிவாகிக் கொண்டிருந்தது. 

தாக்குதல் நடத்திய குறித்த நபர் பணியில் இல்லாத துருக்கிய காவல்துறையாளர் என தெரியவந்துள்ளது. ரஷ்யா, சிரிய அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு அலெப்போவை தாக்குவதற்கு துருக்கிய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு அண்மையில் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS