உலகம்
Typography

அண்மையில் ஊடகப் பேட்டி ஒன்றின் போது துருக்கியிலும் ஜேர்மனியின் பேர்லின் நகரிலும் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களைக் கண்டித்த அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் தான் முஸ்லிம்கள் குறித்து தெரிவித்திருந்த கொள்கைகள் இத்தாக்குதல்கள் மூலம் 100% வீதம் சரியானவை என்றே நிரூபணமாகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் காலத்தில் முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் குடியேற அனுமதிக்கக் கூடாது எனவும் ஏற்கனவே தங்கியிருக்கும் முஸ்லிம்களுக்குத் தனிப்பதிவேடு அமைக்க வேண்டும் எனவும் டிரம்ப் முன் வைத்த யோசனைகள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தன.

இந்நிலையில் எமது நாட்டில் உளவுத்துறை சிறப்பாக செயற்படுவதாகவும் ஆனால் துருக்கியிலும் பேர்லினிலும் மனிதாபிமானத்துக்கு எதிராக தொடுக்கப் பட்ட கொடூரமான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்