உலகம்
Typography

ஜப்பானில் இந்த ஆண்டில்தான் முதல் முறையாக பிறப்பு எண்ணிக்கை குறைவு என்று தகவல் வெளியாகி உள்ளது. 

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறித்து 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப்பட்ட பதிவுகளின்படி, இந்த ஆண்டில்தான் முதல் முறையாக பிறப்பு எண்ணிக்கையானது ஒரு மில்லியனுக்கும் குறைவாக இருக்கும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

 இதனால், அந்நாட்டின் வயதான மக்கள் குறித்த கவலை மீண்டும் தலைத்தூக்கி உள்ளது. தொடர்ந்து, பத்தாவது ஆண்டாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.இதற்கு குறைந்த பிறப்பு விகிதமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இருபது மற்றும் முப்பதுகளில் உள்ள பெண்களின் விகிதம் இருபது சதவிகிதமாக குறைந்ததே முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.  

அடுத்த பட்ஜெட்டில் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை ஜப்பான் அரசாங்கம் அறிவிக்க உள்ளது.1949 ஆம் ஆண்டு ஜப்பானில் பிறப்பு விகிதமானது உச்சத்தில் இருந்த நேரத்தில் 2.7 மில்லியன் குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்