உலகம்
Typography

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பாரிய சுனாமி அனர்த்தம் தாக்கி 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் தாய்லாந்தில் அடையாளம் காணப்படாத நிலையில் இன்னமும் 400 சடலங்கள் இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பாக்ஸிங் டே சுனாமி என அடையாளம் காணப்பட்ட இந்த அனர்த்தத்தில் 9.15 ரிக்டரில்

நிலநடுக்கம் ஏற்பட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பாரிய சுனாமி அனர்த்தம் தாக்கியது.

இதில் உலகம் முழுதும் சுமார் 226 000 பேர் கொல்லப் பட்டனர். உலக வரலாற்றில் இந்த சுனாமி அனர்த்தம் மிகப் பெரிய இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாகப் பதியப் பட்டது. தாய்லாந்தில் இந்த அனர்த்தத்துக்குப் பிறகு இதுவரை சுமார் 5000 உறவினர்கள் வரை இறந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்காக அழைக்கப் பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் பாங் ந்கா மாகாணத்தைச் சேர்ந்த தக்குவா பா மாவட்டத்தின் போலிஸ் பிரதி சுப்ரீட்டெண்டன்ட் ஆன ஆனந்த் பூங்கெர்காவ் இன் கூற்றுப் படி  இன்னமும் 400 சடலங்கள் அடையாளம் காணப் படாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு சுனாமியில் தாய்லாந்தில் மாத்திரம் 5395  பேர் கொல்லப் பட்டதுடன் இதில் 2000 பேர்  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுனாமி தாக்கப் பட்ட பகுதிகளில் புதிய ஹோட்டல்கள் நிறுவப் பட்டுள்ளன. இந்த வருடம் மாத்திரம் தாய்லாந்துக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 32.4 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேலும் தற்போது தாய்லாந்தின் சுனாமி எச்சரிக்கை கருவி உபகரணங்கள் மிகத் தரமான நிலையில் செயற்படுத்தப் பட்டு வருவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS