உலகம்
Typography

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட இந்தியரான குர்திப் சிங் இன் மரண தண்டனையை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துள்ளது இந்தோனேசிய அரசு.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தின் மெஹத்பூர் நகரைச் சேர்ந்தவர்  இந்த 48 வயதாகும் குர்திப் சிங். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு 300 கிராம் போதைப் பொருளைக் கடத்தியதற்காக இந்தோனேசியாவில் கைது செய்யப் பட்டார்.

2005 ஆம் ஆண்டே இவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்ட போதும் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் குர்திப் சிங் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவர், பாகிஸ்தானியர் ஒருவர்,  நைஜீரியர்கள் மற்றும் 2 சிம்பாப்வே நாட்டவர் அடங்கலாக இந்தியரான குர்திப் சிங் இற்கும் மரண தண்டனை ஊர்ஜிதமாகியது. இந்தோனேசியாவின் நுசாகம்பங்கன் தீவு சிறையில் வியாழன் இரவு தண்டனை நிறைவேற்றப் படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தியர் உட்பட 10 பேரின் தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக உத்தியோக பூர்வ அறிக்கையை இந்தோனேசிய அரசு வெளியிட்டுள்ளது.

எனினும் இந்தோனேசியர் ஒருவருக்கும் 3 நைஜீரிய நாட்டவர்களுக்கும் இந்தோனேசிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் இந்தோனேசியா ஏனைய 10 பேருக்கும் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது முக்கியமானதாகும். தற்போது குர்திப் சிங் இன் குடும்பத்தினர் செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் தமது நன்றிக் கடனை மத்திய அரசுக்குத் தெரிவித்தும் உள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்