உலகம்
Typography

அமெரிக்க ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராகக் களம் இறங்கி இருக்கும் ஹிலாரி கிளிங்டன் பாவித்து வரும் கணணி நெட்வேர்க் ஒன்று ஹேக் செய்யப் பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் ஹிலாரியின் தனிப்பட்ட பிரசார பதிவுகள் களவாடப் பட்டுள்ளதுடன் அண்மைக் காலமாக ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிறுவனங்களைக் குறி வைத்து தொடர்ச்சியாக சைபர் அட்டாக் நிகழ்த்தப் பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ்
செய்தித் தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

DNC எனப்படும் தேசிய ஜனநாயக் கமிட்டி மீதும் பிரதிநிதிகளின் இல்லக் கமிட்டி மீதும் இதற்கு முன் ஏற்கனவே இரு சைபர் அட்டாக்குகள் பதிவாகி உள்ளன. இவ்விடயம் தொடர்பாக கிளிங்டனின் பிரச்சாரப் பேச்சாளர் நிக் மெர்ரில் கருத்துத் தெரிவிக்கையில், ஹேக் செய்யப் பட்ட எமது பிரச்சார கணணி பொறிமுறை ஆனது தற்போது வெளியில் இருந்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மூலம்  கண்காணிக்கப் பட்டதாகவும் ஆனால் இதுவரை உள்ளக பொறிமுறைகள் சரியாக இயங்குகின்றன என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பின்னர் பிரச்சார அலுவலகர் ஒருவர் அளித்த தகவலில் DNC இன் பகுப்பாய்வு பொறிமுறை சேர்வரை குறைந்தது 5 நாட்களுக்கு ஹேக் பண்ணி மர்ம நபர்கள்
பாவித்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. இந்த பகுப்பாய்வு தகவல் பொறிமுறை வாக்காளர்கள் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கானது என்றும் ஆனால் இது சமூக
பாதுகாப்பு இலக்கங்களையோ, கிரெடிட் கார்டு இலக்கங்களையோ கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தற்போது ஜனநாயகக் கட்சி மீதான சைபர் தாக்குதல்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என அமெரிக்காவின் நீதிக்கான தேசிய பாதுகாப்புப்
பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் கூற்றுப் படி ஹேக்கர்கள் ரஷ்ய பின்புலத்தைக் கொண்டிருக்கலாம் என ஊகிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS