உலகம்
Typography

பிரித்தானியாவில் 3 நபர்களால் பிறக்கும் குழந்தைக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. 

கருவுறுதல் கட்டுப்பாடு மையம். பிரித்தானியாவில் புதிதாக அளிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால் அடுத்த ஆண்டு முதல் குழந்தை பிறக்க
வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குறித்த உத்தரவை நியூகேஸில் கருத்தரிப்பு மையம், நல்ல செய்தி என உற்சாகமாக வரவேற்றுள்ளது. இந்த புது உத்தரவால் mitochondrial எனப்படும் நோயால் தாக்குண்ட குடும்பத்தினருக்கு ஒரு வரமாக அமையும் என கூறப்படுகிறது.

குறிப்பிட்ட நோயால் பிரித்தானியாவில் ஏராளமான குடும்பங்கள் குழந்தைகளை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த நோயானது தாய்மார்களை மட்டுமே தாக்கும் என்பதால் ஒருவரது கருமுட்டையை எடுத்து தந்தையின் விந்துடன் தானமாக பெறும் இன்னொரு தாயாரின் கருமுட்டையுடன் இணைத்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும்.இதனால் கருமுட்டையை தானமாக வழங்குபவரின் டி.என்.ஏ-வின் தாக்கம் சிறிதளவு மட்டுமே இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த குழந்தை உருவாக்கத்திற்கு பிரித்தானியாவின் உயரிய மருத்துவ அமைப்புகள் அனுமதி வழங்க வேண்டும்.தற்போது இந்த அனுமதி வழங்கியுள்ளதை மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர். மட்டுமின்றி mitochondrial நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு மட்டுமே 3 பேர் இணைந்து உருவாக்கப்படும் குழந்தைக்கு அனுமதி வழங்கப்படும் என மருத்துவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். 

உலகின் முதன்முறையாக ஜோர்தான் நாட்டு தம்பதிகளுக்கு இதுபோன்ற குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது பிரித்தானியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்