உலகம்
Typography

வடகொரியா அண்மைக் காலமாக தனது ஏவுகணைப் பரிசோதனைகளைத் தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் அச்சுறுத்தலாக தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன் அணுவாயுதங்களைத் தாங்கிச் செல்ல வல்ல கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனைகளையும் அது மேற்கொண்டு வருகின்றது.

இதனால் கிழக்கு பசுபிக் கடற்பகுதியில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனது பாதுகாப்புக்காக ஜப்பான் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஜப்பான் தனது கடற்பரப்புக்கு அண்மையில் வடகொரியாவின் ஏவுகணைத் தளங்களையும் தாக்குதல்களையும் இனம் காணும் 5 செய்மதிகளை விண்ணில் செலுத்தியுள்ளது. மேலும் வடகொரியாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பயிற்சியை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் ஜப்பான் அளித்து வருகின்றது.

மறுபுறம் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் வடகொரியாவின் அச்சுறுத்தல் கை மீறிப் போனால் அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேத்தீஸ் தென்கொரியாவுக்கு விஜயம் செய்திருந்த போது வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தென்கொரியாவுக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ரெக்ஸ் டில்லர்சன் தென்கொரிய பிரதமர் ஹ்வாங் யோ அன் ஐ சியோலில் சந்தித்த போதே குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி வைத்துத் தாக்கும் முகமாகவே வடகொரியா ஏவுகணைப் பரிசோதனையை மேற் கொண்டிருந்தது. தற்போது தென்கொரியாவில் கிட்டத்தட்ட 28 000 அமெரிக்கத் துருப்புக்கள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் தான் தென்கொரியாவில் அமெரிக்க இராணுவத்தின் நிலைநிறுத்தத்துக்கு சீனா தன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்