உலகம்
Typography

வடக்கு சிரியாவின் மீது நிகழ்த்தப் பட்ட மோசமான வான் தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்றுக் கொண்ட போதும் 42 பேரைப் பலி கொண்ட மசூதி மீதான தாக்குதல் தமது இலக்காக இருக்கவில்லை என்றும் அறிவித்துள்ளது.

மசூதியில் பலர் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதன் மீது தாக்குதல் நிகழ்த்தப் பட்டதால் 42 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் உறுதிப் படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலில் சிரியாவிலும் ஈராக்கிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப் பட்டு வரும் போதும் தாம் மக்களைக் குறி வைக்கவில்லை என அந்நாடுகள் தெரிவித்து வருகின்றன.

நேற்று வியாழக்கிழமை சிரியாவில் உள்ள அல்கொய்தாவின் சந்திப்புப் பகுதி ஒன்றின் மீது தாம் தொடுத்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. 6 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை 320 000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளதாக ஐ.நா இன் கணிப்புக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்