உலகம்
Typography

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மீன் பிடிக்க சீனாவுக்கு உரிமை இல்லை என கடந்த வாரம் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த சீனா தொடர்ந்தும் அப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதால் பிலிப்பைன்ஸ் உட்பட அப்பிராந்தியத்துக்கு அண்மைய நாடுகள் அதிருப்தி  அடைந்துள்ளன. 

மேலும் சர்வதேச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இராணுவ பதிலடி கொடுக்க அனுமதிக்க வேண்டும் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் இற்கு அந்நாட்டு இராணுவம் அழுத்தம் தெரிவித்துள்ளது. மேலும் சீன இராணுவத்திலேயே இரு பிரிவுகள் உருவாகி ஒரு பிரிவு போரை ஆதரித்தும் இன்னொரு பிரிவு வெறும் இராணுவ பயிற்சியை மாத்திரம் தொடர்வோம் ஆனால் அமெரிக்க ரோந்து கப்பல்கள் வந்தால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அரசுக்கு கருத்துத் தெரிவித்துள்ளன.

இதேவேளை தென் சீனாவின் இதே சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிகளில் சீனா சொந்தம் கொண்டாடும் ஓர் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மீன் பிடித்தால் அவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப் படும் என பீஜிங் உச்ச நீதிமன்றம் கட்டளை இட்டுள்ளது. கடந்த காலத்தில் சீனா அதிகாரிகள் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மீனவர்களை அத்து மீறி மீன் பிடித்ததற்காக அவ்வப்போது கைது செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்