உலகம்
Typography

அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் 10 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டமை கண்டறியப் பட்டுள்ளது. ஏற்கனவே தென்னமெரிக்க நாடுகளை அச்சுறுத்தி வந்த இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவுவது இப்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளமையால் உச்சக் கட்ட கண்காணிப்பில் மருத்துவக் குழுக்கள் வைக்கப் பட்டுள்ளன. 

எடிஸ் என்ற நுளம்புகள் மூலம் முன்பு பரவி வந்த இந்த வைரஸ் தாக்குபவர்களுக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தக் கூடியதுடன் கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை வளர்ச்சி குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்புடன் குழந்தைகள் பிறக்கவும் வழி செய்து விடுகின்றன. பிரேசிலில் இக்குறைபாடுகளுடன் 5000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த தென்னமெரிக்க நாடுகள் வேறு வழியின்றி ஜிகா வைரஸின் தாக்கம் முற்றாக ஒழிக்கப் படும் வரையில் கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS