உலகம்
Typography

ஏட்ரியாடிக்-ஈஜியன் (balkan) மூலம் தப்பிக்கும் வழிகள் தடுத்திருக்கும் காரணத்தினால்,  பல அகதிகள்  ஆபத்தான வழிகளால் தமது நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்.  இதனால்  உயிர் இழக்கும் அகதிகளின் எண்ணிக்கை இவ்வாண்டில் பெருமளவில் உயர்ந்திருக்கிறது என ஐ.ஓ.எம் (International Organization for Migration)  பேச்சாளர் ஜோயல் மில்லமண் (Joel Millmann)  தெரிவித்துள்ளார். 

ஜெனிவாவில் நேற்று செவ்வாய்கிழமை இவ்விடயத்தைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 ம் ஆண்டுடன் ஒப்பிடும் பட்சத்தில்,  இந்த ஆண்டு தமது உயிரை இழந்த அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2016ல் பல்வேறு தப்பிக்கும் வழிகளில்  இதுவரை உலகளவில் 4027 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.  இது கடந்த ஆண்டை விட 26 சத வீதம் அதிகமானது. சர்வதேச குடியேறுவோர் அமைப்பின் கணிப்புக்களின்படி,  மத்திய தரைக்கடல் பாதைகளில், மட்டும் 3120 அகதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  அதிக அளவில் ஆபத்தான  லிபியா கடற்கரையில் இருந்து ஐரோப்பாவை அடையும் பயணத்தில் கடந்த நாட்களில் 120 அகதிகள் லிபியாவின்  சபரடோ நகர் அருகே உள்ள  (Sabrata) கடலில் மூழ்கி இறப்பை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. 

பால்கன் பாதை மூடப்பட்ட காரணத்தினால் துருக்கியில் இருந்து கிரீஸ் ஊடக ஐரோப்பா வரும் அகதிகள்குறைந்துள்ளனர்.  அதே சமயத்தில் வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவை அடைய அகதிகள் முயலுகின்றனர் எனவும் ஜோயல் மில்லமண் மேலும் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்