உலகம்
Typography

எமிரேட்ஸ் நிறுவனத்தினத்திற்குச் சொந்தமான EK521 வகை விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் விபத்துக்குள்ளாகியது.

இன்று புதன்கிழமை திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற விமானம், தரையிறங்க முற்பட்டபோது, விமானத்தின் வால் பகுதி முதலில் தரையை தட்டியதால் இவ் விபத்து நேர்ந்ததாக அறியப்படுகிறது. விபத்துக்குள்ளான வேளையில்,  விமானம் சிறிது தூரம் விமான ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடியபோதும், சில அடி தூரம் சென்று விமானம் நின்றுவிட்டது. பயணிகள் உடனடியாக விமானத்தின் அவசரகால வாசல்கள் வழியாக  வெளியேற்றப்பட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் உடனே வந்து தீயை அணைக்கும் வேலையில் ஈடுபட்டனர்.

திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற இந்த விமானத்தில் 282 பயணிகளும்,  13 பணியாளர்களும் பயணித்திருந்தனர். இந்த விபத்தால் பயணிகளின் உயிருக்கோ, உடலுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  இந்த சம்பவம் துபாய் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், துபாய் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்படுள்ளதாகவும் அறிய வருகிறது.

டுபாய் விமான நிலையம் தனது டுவிட்டரில் அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரை பயணிகளை பொறுமை காக்குமாறும் விமான நிலையத்தின் செயற்பாடு பற்றி  5 மணிக்குள் தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளது. பயணிகள் மேலதிக தகவல்களை தத்தமது ஏர்லைன்ஸ் சேவைகளிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்