உலகம்
Typography

ஜப்பான் கடற்பரப்பின் 250 KM தொலைவில் வடக்குக் கடற்கரைக்கு அண்மையில் ஜப்பானின் முக்கிய வர்த்தக வலயத்தில் தனது ஏவுகணை வந்து வீழுமாறு முதன்முறை  பரிசோதனை செய்துள்ளது வடகொரியா. இதன் காரணமாக கொரிய வலயத்தில் மாத்திரம் அல்லாது ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

இந்த ஏவுகணைப் பரிசோதனை குறித்து அமெரிக்க இராணுவம் தெரிவிக்கையில் வடகொரியா மத்திய தரத்தைச் சேர்ந்த இரு றொடொங் ஏவுகணைகளை செலுத்தியதாகவும் இதில் ஒன்று புறப்பட்ட மாத்திரத்தில் வானத்திலேயே வெடித்துச் சிதறிவிட மற்றையது ஜப்பான் கடலில் வந்து வீழ்ந்துள்ளது எனவும் கூறியது. கடந்த வாரம் தான் தென்கொரியாவும் அமெரிக்காவும் தமது கூட்டு இராணுவப் பயிற்சியை விரிவுபடுத்தி இருந்ததுடன் வடகொரியாவுக்கு எதிரான ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறையை தென்கொரியாவில் நிறுவியும் இருந்தன. இது வடகொரியாவின் கோபத்தை அதிகரித்து விட்டதால் தான் அது மறுபடி ஏவுகணைகளை ஏவி அச்சுறுத்தலைத் தொடங்கியுள்ளது.

இந்த ஏவுகணைத் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜப்பான் பிரதமர் நிச்சயமாக இது ஒரு  மோசமான அச்சுறுத்தல் எமது நாட்டுக்கு என்றும் இதனை இப்படியே விட முடியாது என்றும் கூறினார். மேலும் அமெரிக்க அரசோ இப்பரிசோதனையை கண்டித்ததுடன் வடக்கொரியாவின் ஏவுகணைத் தொழிநுட்பத்தை அது பயன்படுத்துவது தொடர்பிலான ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இது முரணானது என்றும் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்