உலகம்
Typography

வறிய ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பாய்ந்து செல்லும் நைல் நதி பெருக்கெடுத்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 76 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சூடானில் உள்ள 13 மாகாணங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. 3206 வீடுகள் முற்றாக அழிந்திருப்பதாகவும் 3048 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. சூடான் வறிய  நாடு ஆகையால் அங்கு நகர்ப்புறக் கட்டமைப்புக்கள்  உறுதியானதாக அல்லாத காரணத்தாலும் வளர்ச்சி குன்றிய கிராமங்களும் அதிகளவு பாதிக்கப் பட்டுள்ளன. மீட்புப் பணிக்கு சூடான் சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளது. நைல் நதியின் மட்டம் மிகவும் உயர்ந்திருப்பதால் நிவாரணப் பொருட்களை உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லத் தடை ஏற்பட்டுள்ளாது.

பலத்த மழை இன்னும் சில நாட்களுக்கும் நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நைல் நதி இந்தளவுக்குப் பெருக்கெடுத்தது இல்லை என சூடானின் நீர்ப்பாசனத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்