உலகம்
Typography

சிரியாவின் கிளர்ச்சிப் படையினரால் முற்றுகையிடப் பட்டுள்ள அலெப்போ நகரை அங்கிருக்கும் பல ஆயிரக் கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் மீட்பதற்கு சிரிய இராணுவம் முயற்சி செய்து வருகையில் சற்று அழுத்தமான இராஜதந்திர பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் இதனால் இன்னும் சில நாட்களுக்குள் அலெப்போவில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. 

கிழக்கு அலெப்போவில் கிளர்ச்சியாளர்களுக்கும் சிரிய, ரஷ்ய மற்றும் ஈரானிய நாட்டுப் படைகளுக்கு இடையிலும் தற்போது மோதல் போக்கு இடம்பெற்று வருகையில் அமெரிக்காவினதும் ரஷ்யாவினதும் கூட்டு முயற்சியினால் தான் இந்த யுத்த நிறுத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சிரியாவுக்கான ஐ.நா தூதுவர் ராம்ஷி கருத்துத் தெரிவிக்கையில் ஆகஸ்ட் இறுதியில் சிரிய அரசுக்கும் எதிரணியினருக்கும் நம்பத் தகுந்த புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற சாத்தியம் உள்ளது என்றுள்ளார்.

இதேவேளை அலெப்போவில் சிக்கியுள்ள சுமார் 250 000 பொது மக்களைப் பாதுகாப்பாக வெளியேற ஐ.நா தலைமையில் ரஷ்யாவால் வாய்ப்பு அளிக்கப் பட்ட போதும் வெகு சிலரே அங்கிருந்து வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS