உலகம்
Typography

2017 ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பத்திரிகையின் உலகளாவிய மாற்றத்தில் பங்கேற்ற நபர்களுக்கான வருடாந்த பட்டியலில் அதாவது குளோபல் கேம் சேஞ்சர் பட்டியலில் இவ்வருடம் இடம்பெற்றுள்ள 25 சாதனையாளர்களில் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடம் பெற்றுள்ளார்.

மாறி வரும் உலகத்துக்கு ஏற்ப புதிய சிந்தனைகளைப் புகுத்தி செயற்படக் கூடியவர்கள் மற்றும் உலகின் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கூடியவர்கள் என மிக முக்கியமான 25 நபர்களைத் தேர்ந்தெடுத்து அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை தொடர்ந்து 2 ஆவது வருடமாக வெளியிட்ட இப்பட்டியலில் தான் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கிக் கிட்டத்தட்ட 10 கோடி வாடிக்கையாளர்களை 6 மாதங்களில் சம்பாதித்ததன் மூலம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் இணையத்தைக் கொண்டு சேர்த்து அதில் வெற்றி பெற்றதற்காக முகேஷ் அம்பானிக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற சக்தித் தேவைக்கான தொழில் அதிபராக இருந்த முகேஷ் அம்பானி தொலைத் தொடர்பு சந்தைக்குள் நுழைந்ததன் பின் மிகவும் எழுச்சி பெற்று மிகக் குறைந்த விலைகளில் வேகத்துடன் கூடிய இணையப் பாவனையை இந்தியாவின் மூலை முடுக்குக்கு எல்லாம் பரவச் செய்துள்ளார்.

இந்தியாவில் தற்போது 4ஜி நெட்வேர்க் சேவையில் தற்போது முன்னணி தொழில் அதிபராக முகேஷ் அம்பானி திகழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்