Wednesday, May 22nd

Last update10:22:12 PM

சீன நிலநடுக்கத்தில் 80 பேர் பலி : மீட்பு பணிகளில் சிரமம்

தென்மேற்கு சீனாவில் நேற்று ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கலாம் எனும் அச்சம் காரணமாக நிலநடுக்கம் ஏற்பட்ட கிராமப்பகுதிகளில் சீன இராணுவத்தினர் மீட்பு பணிகளை முடக்கிவிட்டுள்ளனர்.

மோப்ப நாய்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உதவியுடன் இம்மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதுன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேசத்திடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளது.  நேற்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் நண்பகல் 11.19 மற்றும் 12.16 மணிக்கு சீனாவின் எல்லைப்பகுதியில் யுன்னான் பிரதேசத்தில் யிலாங் மற்றும் வெயினிங் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து இந்நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதுவரை 800 க்கு அதிகமானோர் இந்நிலநடுக்கத்தினால் காயமடைந்துள்ளதுடன். சுமார் 740,00 மக்கள் நிலநடுகத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அன்றிரவு முழுவதும் தொடர்ச்சியாக 6 சிறிய நிலநடுக்கங்கள் அப்பகுதியில் உணரப்பட்டதால், ஒரு இலட்சத்திக்கு அதிகமான உள்ளூர் வாசிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி கிராமப்புறம் என்பதால் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில், சுமார் 6,650 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 3.5 பில்லியன் யுவான் (551 மில்லியன் அமெரிக்க டாலர்) வரை பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில், வருடாந்திர வர்த்தக மாநாடு ஒன்றில் தற்சமயம் கலந்து கொண்டுள்ள சீன அதிபர் வென் ஜியாபோ மற்றும் ஏனைய சீன அரச தலைவர்கள் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு சர்வதேச நாடுகளிடம் கோர்க்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு சீனாவின் சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 90,000 பேர் கொல்லப்பட்டிருந்தனர். மிகவும் உறுதியற்ற கட்டிட அமைப்புக்களே இதற்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus