உலகம்
Typography

அண்மையில் தனது இராணுவ அதிகார சட்டத்தில் 3 திருத்தங்களை அமெரிக்கா கொண்டு வந்திருப்பதாலும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் திருப்திகரமாக ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டிருப்பதாலும் இவ்வருடம் பாகிஸ்தானுக்கான இராணுவ நிதியுதவி அளிப்பதில் அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஏற்கனவே தீவிரவாத அமைப்புக்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது தொடர்பில் பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா பலமுறை எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலரின் ஒப்புதலுக்குப் பிறகு தான் பாகிஸ்தானுக்கு இராணுவ நிதியுதவி அளிக்கப் படும் என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கு வஜிரிஸ்தானில் ஹக்கானி வலையமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சான்றிதழ் அளிக்கும் பட்சத்தில் ஒக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2018 வரையிலான கால கட்டத்துக்கு  400 மில்லியன் டாலர்கள் இராணுவ நிதியுதவியைப் பாகிஸ்தான் பெற முடியும்.

ஏற்கனவே முன்னால் அல்கொய்தா இயக்கத் தலைவனான பின்லேடனைக் காட்டிக் கொடுத்த பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஷகில் அஃப்ரிடி சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருப்பது பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுக்கு இன்னமும் தடையாக இருப்பதும் நோக்கத்தக்கது. இதேவேளை இந்தியாவுடனான அமெரிக்காவின் பாதுகாப்புக் கூட்டுறவுக்காக சுமார் $621.5 பில்லியன் டாலர்களை ஒதுக்க அமெரிக்க பிரதிநிதிகள் இல்லம் சம்மதித்துள்ளது. ஆக்டோபர் முதல் அமுலுக்கு வரக்கூடிய இந்த நிதி ஒதுக்கீடு உலகின் பழமையான ஜனநாயக தேசமான அமெரிக்காவுக்கும் உலகின் இன்றைய மிகப்பெரிய ஜனநாயக தேசமான இந்தியாவுக்கும் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர அடிப்படையிலான உறவை வளர்க்க உதவும் என அமெரிக்க காங்கிரஸில் அங்கம் வகிக்கும் இந்தியரான அமி பேரா தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்