Thursday, Jun 20th

Last update07:25:06 AM

நீல் ஆர்ம்ஸ்ட்ரோங்கின் அஸ்தி கடலுக்கடியில் அடக்கம்

சரித்திரத்தில் மிக முக்கிய மனிதர்களில் ஒருவராகக் கருதப்படும் நிலாவில் முதன் முறை கால் பதித்த விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் ஆகஸ்ட் 25 இல் மரணமாகியிருந்தார்.

தகனம் செய்யப் பட்ட அவர் உடலின் அஸ்தி வெள்ளிக்கிழமை அத்திலாந்திக் கடலில் அமெரிக்கக் கப்பற் படையின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வைபவத்தில் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங்கின் மனைவி கரோல் ஆர்ம்ஸ்ட்ரோங் பங்கு பற்றினார்.

82 வயதில்  காலமான நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் நாசாவில் இணைந்து நிலவில் கால் பதிக்க முன் அமெரிக்கக் கப்பற் படையில் பதவி வகித்து இருந்ததுடன் கொரிய யுத்தத்தின் போது 78 combat mission களில் பங்கேற்றிருந்தார்.

இவர் தனது 38 ஆவது வயதில் 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 இல் நிலவுக்குச் சென்ற அப்பொலோ 11 விண்வெளி ஓடத்தின் கொமாண்டெர் ஆகப் பணி புரிந்தார்.
வியாழக்கிழமை வாஷிங்டன் தேசிய தேவாலயத்தில் நிகழ்ந்த ஆர்ம்ஸ்ட்ரோங்கின் நினைவஞ்சலியில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus