இலங்கை
Typography

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

செல்வராசா ஜயந்தன் (39) என்கிற குறித்த சந்தேகநபர், இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் கடந்த 22ஆம் திகதி பொலிஸ் சாஜன் ஒருவரை துப்பாக்கியினால் சுட்டுக்கொலை செய்து மேலும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் சற்று முன்னர் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்