உலக சந்தைக்கு இன்னமும் 3000 ஆண்டுகளுக்கு வைரங்களை வழங்கக்கூடிய ரஷ்யாவின் பள்ளத்தாக்கு
- Wednesday, 19 September 2012 05:50
ரஷ்யாவின் சைபீரிய வனப் பகுதியில் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மோதிய விண்கல்லால் 62 மைல் விட்டமுள்ள பள்ளத்தாக்கு ஒன்று ஏற்பட்டிருந்தது.
சமீபத்தில் இப் பள்ளத்தாக்கின் அடியில் இன்னமும் 3000 வருடங்களுக்கு உலக சந்தைக்கு வழங்கக் கூடியளவுக்கு ட்ரில்லியன் கேரட் கணக்கான வைரங்களைத் தோண்டி எடுக்க முடியும் என நிபுணர்கள் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Popigai Astrblem எனப் பெயரிடப் பட்டுள்ள சைபீரியாவில் உள்ள இப் பகுதியில் கிடைக்கும் வைரங்கள் சாதாரண வைரங்களை விட இரு மடங்கு அதிக கடினமுடையது என்பதுடன் அதி உயர் விஞ்ஞான உபகரணங்களையும் தொழி நுட்பக் கருவிக்ளையும் கொண்டு செதுக்கக் கூடியது. இப் பள்ளத்தாக்கு 1970 ஆம் ஆண்டிலே கண்டுபிடிக்கப் பட்டிருந்த போதும் மிகவும் கட்டுப்பாடு உடைய உலக சந்தைகளின் கொள்கைகளால் பாதிக்கப் பட்ட சுயநலவாதிகளின் செய்கைகளால் வெளியுலகுக்கு மறைக்கப் பட்டு இரகசியமாக வைக்கப் பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
