உலகம்
Typography

வியாழக்கிழமை யேமெனை நோக்கி புறப்பட்ட அகதிகள் படகில் இருந்து ஆள்கடத்தல் பேர் வழிகளால் 180 பேர் வலுக்கட்டாயமாக யேமென் கடலில் வீசப்பட்டதில் 5 பேர் பலியானதுடன் 50 பேர் காணாமற் போயுள்ளதாக இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேபோன்ற ஒரு நிகழ்வில் தான் புதன்கிழமை 50 அகதிகள் கொல்லப் பட்டும் 22 பேர் காணாமற் போயும் இருந்ததாகவும் தெரிய வருகின்றது. இன்றைய நிகழ்வில் காயம் அடைந்தவர்களுக்கு கருங்கடலில் உள்ள யேமென் கடற்கரைப் பகுதியில் ஐ.நா அகதிகள் ஏஜன்ஸியால் சிகிச்சை அளிக்கப் பட்டதாகவும் இவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் என்பதை இன்னமும் உறுதிப் படுத்த முடியவில்லை என்றும் யேமென் தெரிவித்துள்ளது.

அரபு உலகத்தில் மிக நீண்ட காலமாக மிகவும் வறிய நாடாக இருந்து வரும் யேமெனில் உலகில் மிகப்பெரிய மனித அவலம் நிகழ்ந்து வருவதாக ஐ.நா பிரகடனப் படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2015 முதல் சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் யேமெனில் தொடுத்து வரும் போரினாலும் பஞ்சத்தினாலும், கொலரா போன்ற தொற்று நோய்களாலும் யேமெனில் இதுவரை 10 300 பொது மக்கள் கொல்லப் பட்டும் மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர். இந்நிலையில் IOM எனப்படும் இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அளித்த தகவலில் 2017 தொடக்கத்தில் இருந்து ஆப்பிரிக்காவில் இருந்து 55 000 அகதிகள் யேமெனை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

மேலும் யேமெனுக்கு அண்மையில் செங்கடலிலும் ஏடென் வளைகுடாவிலும் ஆள்கடத்தல் பேர் வழிகள் அதிகளவில் இயங்கு நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்