Thursday, May 23rd

Last update08:40:19 AM

அமைதி உடன்படிக்கைக்கு இணங்கியது பிலிப்பைன்ஸ் கிளர்ச்சிக்குழு

பிலிப்பைன்ஸ் நாட்டின் இஸ்லாமிய கிளர்ச்சிக்குழு சமாதான உடன்படிக்கை ஒன்றுக்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், பிலிப்பைன்ஸில் தொடர்ந்து வந்த 40 வருடகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.

இஸ்லாமிய சுதந்திர முன்னணி (MILF) எனப்படும் இக்கிளர்ச்சிக்குழு தனியாட்சி கோரி பிலிப்பைன்ஸில் போராடி வந்தமமையினால் இதுவரை அரச படைகளுக்கும், இக்கிளர்ச்சிக்குழுவுக்கும் இடையில் நடைபெற்று வந்த மோதலில் சுமார் 120,000 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகுயினோ, புதிய தன்னாட்சி பிராந்தியம் ஒன்றை குறித்த கிளர்ச்சிக்குழுவுக்கென பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் அமைத்துக்கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து இந்த அமைதி உடன்படிக்கை எட்டப்படவிருக்கிறது.

பங்ஸ்மொரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த பிராந்தியம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அடுத்த வாரம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus