Monday, May 20th

Last update10:24:15 PM

2012ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2012 ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் டேவிட் வின்லேண்ட் மற்றும் பிரான்ஸின் சேர்ஜ் ஹாரோச் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒளி மற்றும் திடப்பொருள் தொடர்பில் அவர்களது குவாண்டம் ஆராய்ச்சியை கௌரவித்து இப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் துகள்களை சிதைக்காமல், தனிப்பட்ட துகளை அளவிட முடியும் என இவர்கள் கண்டுபிடித்துள்ளதுடன், இது இயற்பியலில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்திருப்பதாக தேர்வுக்குழு கூறியுள்ளது. கணணித்துறையில் மிக முக்கியமாக கருதப்படும் குவாண்டம் பௌதீகவியலில் இவர்களது தற்போது கண்டுபிடிப்புக்கள், மிக வேக கணிணிகளை தயாரிக்கும் ஆராய்ச்சியின் முதல்படியாக உள்ளது. இது மட்டுமில்லாது இவர்களது கண்டுபிடிப்புக்கள் புதிய கடிகாரங்களை தயாரிக்கவும் முன்னோடியாக இருந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டும் பௌதீகவியலுக்கான நோபல் பரிசு குவாண்டம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காகவே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளை வேதியலுக்கான நோபல் பரிசும், வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசும், வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளது. டிசம்பர் 10ம் திகதி நோபல் நினைவு தினத்தின் போது அனைத்து பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus