Tuesday, May 21st

Last update03:49:07 PM

ஜோ பிடேய்ன் - போல் ரியான் இடையில் நேற்று ஆக்ரோஷமான தொலைக்காட்சி விவாதம்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களான ஜோ பிடேன் மற்றும்  எதிர்க்கட்சியின் போல் ரியான் ஆகியோருக்கு இடையில் நேற்று ஆக்ரோஷமான நேரடி தொலைக்காட்டி விவாதம் நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளர் மிட் ரூம்னி இடையே அண்மையில் நடந்து முடிந்த முதலாவது நேரடி விவாதத்தில் மிட் ரூம்னியின் பேச்சுத்திறன் மேலோங்கியிருந்தது.

இந்நிலையில் நேற்றைய விவாதத்தில், ஜோ பிடேன் மிகுந்த ஆக்ரோஷமாக காணப்பட்டதுடன், போல் ரியான் அமைதியான முறையில், ரூம்னியின் கொள்கைகளை வலுப்படுத்தும் வகையிலும், அதற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் பேசிக்கொண்டிருந்தார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், வரி மற்றும் சுகாகாதார கொள்கைகள் தொடர்பில் அவர்களுடைய விவாதம் அமைந்திருதது.  போல் ரியான் விஸ்கொன்ஸின் மாகாணத்தின் காங்கிரஸ் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முதலாவது விவாதத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, மிட் ரூம்னிக்கு கொஞ்சம் கூடுதலாகவே மரியாதை கொடுத்துவிட்டார் என ஒபாமாவின் ஆதரவாளர்கள் குறைபட்டுக்கொண்டனர்.

இதையடுத்து இம்முறையும் அந்த தவறு நேர்ந்துவிட கூடாது என ஜோ பிடேய்ன், ரூம்னியின் கொள்கைகள் மீது ஆக்ரோஷமாக பாய்ந்தார்.    கெண்டகி மத்திய கல்லூரியில், ஏபிசி செய்தி ஊடகத்தின் ஏற்பாட்டில் இவ்விவாதம் நடைபெற்றது. அடுத்த விவாதம் மீண்டும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இடையே அக்.16ம் திகதி நடைபெறுகிறது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus