Tuesday, May 21st

Last update01:02:10 PM

உலக சனத்தொகை அதிகரிப்பது நிற்குமா? : 2050 இல் என்ன நிலைமை?

2050 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை 10 பில்லியனை எட்டி விடும் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா இன் சனத்தொகை நிதியமான UNFPA சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இச்செய்தி கூறப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் சில அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகியுள்ளன.

இவற்றில் இன்று உலகில் காணப்படும் சனத்தொகையில் ஒன்பது பேரில் ஒருவர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினை உடையவர்கள் என்ற போதும் 2050 ஆம் ஆண்டளவில் இந்த சதவீதம் ஐந்தில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 2050 ஆம் ஆண்டளவில் 15 வயதுக்கு உட்பட்டவர்களை விட வயதானவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இத்தகவலை UNFPA ஐச் சேர்ந்த 'Dr.Ann Pawliczko' ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். 2050 இல் சனத்தொகை அதிகரித்த போதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை அதிகமாக இருந்தால் அதிக மக்கள் நீண்ட காலம் வாழக்கூடிய தன்மையைப் பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சியான விடயமாகும்.

ஆனால் இதை இன்னொரு கோணத்தில் ஆராய்ந்தால் இம் முதியோர்களுக்குத் தோதாக பொருளாதார மற்றும் சமூக ரீதியான் சவால்களை எப்படிக் கையாளவது என்பது பிரச்சனைக்குரிய ஒன்றாகும் எனவும் UNFPA தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டளவில் ஐ.நா இன் பொருளாதார மற்றும் சமூக விடயங்கள் தொடர்பான திணைக்களம் 2300 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை மொத்தம் எவ்வளவு இருக்கக் கூடும் என யூகித்திருந்தது. இதன் அடிப்படையில் 2050 இல் சனத்தொகை ஏறக்குறைய 9 பில்லியனாக இருக்கும் எனவும் இதனைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு இதில் அதிகரிப்பு ஏற்படாமல் அப்படியே இருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டது.

எனினும் இது இடைப்பட்ட யூகமாகும். அதிகளவு யூகமாக 36.4 பில்லியன் அதிகரிப்பும் 2 மிகக் குறைந்த யூகமாக 2.3 பில்லியனும் அதிகரிப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus