உலகம்
Typography

தென்கிழக்கு தரை சூழ் ஐரோப்பிய நாடான மசெடோனியவைக் கடந்த சில நாட்களாகப் பாரிய புயல் தாக்கி வருகின்றது. இதனால் தலைநகர் ஸ்கொப்ஜே உட்பட அதைச் சுற்றி இருக்கும் Smilkovci,Singelic,Stajkovci மற்றும் Aracinovo ஆகிய கிராமப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

கார்களும் வீடுகளும் வெள்ளத்தில்  அடித்துச் செல்லப் பட்டுள்ளதுடன் குறைந்தது 15 பேர் பலியாகி இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலான இளம் சிறுவர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனதுடன் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும் தற்போது மழை வீழ்ச்சி சற்று குறைவடைந்திருப்பதால் மீட்புப் பணிகள் துரிதப்  படுத்தப் பட்டுள்ளன. பாதிக்கப் பட்ட பல இடங்களில் நீர் மட்டம் 1.5 மீட்டருக்கு உயர்ந்துள்ளது. இதை விட மிக மோசமான மின்னல் தாக்குதல்கள் 800 பதியப் பட்டுள்ளன. முக்கியமாக விடுமுறை விடுதி அமைந்துள்ள ஒஹ்ரிட் ஏரி அருகே தண்டர் ஸ்டோர்ம் என்ற இந்த மின்னல் அதிகமாகத் தாக்கியுள்ளது.

1962 ஆம் ஆண்டு மோசமான வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருந்த மசெடோனியா அதற்கு பின் பாரிய நில நடுக்கத்தாலும் தாக்கப் பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் பல்கான்ஸ் பிராந்தியத்தை மிக மோசமான வெள்ளம் தாக்கியதில் சேர்பியா மற்றும் பொஸ்னியாவில் 47 பேர் கொல்லப் பட்டும் 1.6 மில்லியன் பேர் பாதிக்கப் பட்டும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்