உலகம்
Typography

ஞாயிற்றுக்கிழமை தனது ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி பேரழிவை ஏற்படுத்திய தினத்தின் 71 ஆவது நிறைவு  அஞ்சலியை ஜப்பான் அரசு அனுட்டிக்கின்றது. இதற்காக டோக்கியோவின் நினைவகத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தலைமையில் ஒன்று கூடிய சுமார் 50 000 பொது மக்கள் 7 தசாப்தங்களுக்கு முன் ஹிரோசிமாவில் அணுகுண்டு வெடித்த அதே நேரத்தில் எழுந்து நின்று தமது இன்னுயிரைத் துறந்த மக்களுக்கு அஞ்சலியை செலுத்தினர். 

மேலும் குறித்த தினத்தில் ஹிரோஷிமா மேயர் உலக நாடுகள் அணுவாயுதங்களின் பேரழிவுத் தன்மையைப் புரிந்து கொண்டு அவற்றைக் கைவிட முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை  முன் வைத்தார். இன்றைய வருடாந்த நினைவஞ்சலி முதன்முறையாக அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் போதே ஒபாமாவினால் சில மாதங்களுக்கு முன்பு ஹிரோசிமா சென்று திரும்பியதை அடுத்து இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 6 ஆம் திகதி 1945 ஆம் ஆண்டு  காலை 8:15 மணிக்கு 'லிட்டில் போய்' என்ற தனது அணுகுண்டை அமெரிக்காவின் B-29 bomber எனோலா கே என்ற விமானம் ஹிரோசிமாவை நோக்கி வீசியதில் 140 000 மக்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 3 நாட்கள் கழித்து நாகசாகி நகரின் மீது அடுத்த அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இதிலும் பல ஆயிரக் கணக்கான மக்கள் மாண்டனர். மேலும் ஜப்பான் உடனே சரணடைந்தது. இச்சம்பவம் நடந்து இவ்வளவு வருடங்கள் கழித்து அதிகாரத்தில் இருக்கும் போதே ஜப்பானுக்கு விஜயம் செய்து சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவார். இந்நிலையில் ஒபாமாவின் விஜயம் உலக நாடுகள் தமது அணுவாயுத உற்பத்தியைக் குறைத்து அவற்றைக் கைவிட முன் வருவதற்கான சந்தர்ப்பத்தை தரக்  கூடியது என ஹிரோசிமா மேயர்  நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS