உலகம்
Typography

 

விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் ஆய்வு மையமான டியாங்காங் என்ற சீன செய்மதி செயலிழந்துள்ளது. இது தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்துள்ளதால் எதிர்வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப் பகுதியில் பூமியுடன் மோதும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு சீனாவால் பூமியின் மேலே நிறுவப் பட்ட டியாங்காங் செய்மதி 8.5 டன் எடையுடையது ஆகும். இந்த செய்மதி பூமியை நோக்கிக் கீழே விழும் போது அதன் வேகம் காரணமாகவும் வளி மண்டல உராய்வு காரணமாகவும் பெருமளவிலான பாகம் எரிந்து சிதைந்து விடும். இருந்த போதும் அதிகபட்சமாக 100 kg எடையுடைய பாகம் பூமியுடன் நேரடியாக மோதும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

மேலும் இந்த செய்மதி விளக்கூடிய பூமியின் அட்ச ரேகைகளின் தீர்மானப் படி இதன் பாகங்கள் நியூயோர்க், லாஸ் ஏஞ்சலஸ், பீஜிங், டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் ரோம் போன்ற முக்கிய நகரங்கள் மீது விழ வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்