Monday, May 20th

Last update09:01:27 PM

சைக்கிளில் பயணித்து இணையப்பாடம் : பயனடையும் வங்கதேச கிராமங்கள்

இதுவரை கணனிகளையே பார்க்காத வங்கதேச கிராமப் பெண்மணிகள் கணனி இணையபாவனையில் அனைத்தையும் பெற தொடங்கியுள்ளனர்.

வங்கதேசத்தில் 2008ஆம் ஆண்டு உள்ளூர் வளர்ச்சிக் குழுவான டி.னெட் எனும் அமைப்பு குக்கிராமங்களில் இணையத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்காக 10க்கும் மேற்பட்ட இன்ஃபோலேடிஸ் என்ற அழைக்கப்படும் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் வங்கதேசத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று லாப்டாப் மூலம் பெண்மணிகளுக்கு இணையப்பயன்பாட்டை அறிமுகம் செய்து அதை எவ்வாறு கையாள்வது எனவும் விளக்கம் தருகின்றனர்.


இச் சேவையால் நிறைய கிராமப் பெண்மணிகள் பயனடைந்துள்ளனர். கணனிகளையே பார்க்காத சில பெண்மணிகள் ஸ்கைப், சாட்டிங் என அனைத்தையும் கையாளுகின்றனர். தங்களது தூர தேசத்து உறவினர்களுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றனர். அதோடு செய்திகள், அரசு சார்ந்த சேவைகைள் பொழுது போக்கு அம்சங்கள் என அனைத்தும் பார்வையிடுகின்றனர்.

டி.னெட் அமைப்பு இத் திட்டத்திற்கு நிதி வருவதைப் பொறுத்து மேலும் சில பேரை நியமித்து கிராமம் முழுதும் இணையத்தை பழக்கப்படுத்தப்போவதாக கூறியுள்ளது.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus