உலகம்
Typography

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இனைக் கொல்லவென சதி முயற்சித் திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டனில் இரு தீவிரவாதிகள் போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

3 நாட்களுக்கு முன்னர் இலண்டனில் வைத்து கைது செய்யப் பட்ட இவர்கள் மீது மேற்கொள்ளப் பட்ட விசாரணையின் போதே இத்தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரதமர் தெரேசா மே வெஸ்ட்மிண்டர் நீதிமன்றம் வழியாக வரும் போது அவரது வாகனத்தின் மீது குண்டு வீசவும் அதன்போது ஏற்படும் குழப்பத்தில் தெரேசா மே இனைக் கத்தியால் தாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். கைது செய்யப் பட்டவர்கள் பெயர் விபரம் வெளியானதுடன் இவர்கள் இருவரும் 20 மற்றும் 21 வயதைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைதான இவர்கள் இருவரும் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னமும் தெரிய வரவில்லை. பிரிட்டனில் மே மாதம் மன்செஸ்டாரில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 22 பேர் கொல்லப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS