உலகம்
Typography

திங்கட்கிழமை பாகிஸ்தானின் பலுஜிஸ்தான் பகுதியில் குவெட்டா நகரில் உள்ள சன நெருக்கடி மிக்க  வைத்திய சாலை ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்  நிகழ்த்தப் பட்டு பின்னர் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் பலி எண்ணிக்கை 93 ஆக உயர்வடைந்துள்ளதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

முன்னதாக சில மணித்தியாலங்களுக்கு முன் குவெட்டா பகுதியில் சுட்டுக் கொல்லப் பட்ட முக்கியமான வழக்கறிஞர் ஒருவரின் சடலத்தைப் பெறுவதற்காக இந்த வைத்தியசாலையில் சுமார் 100 சட்டத்தரணிகள் கூடியிருந்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் அப்படியே வீடியோவில் இரு தொலைக்காட்சி கேமரா மேன்கள் உட்பட பலர் பலியாகி எங்கும் இரத்தக் கறையாக இருப்பது தெளிவாகப் பதிவாகி உள்ளது. குண்டு வெடிப்பு அகற்றும் குழு ஆய்வின் பின் கருத்துத் தெரிவித்த போது சுமார் 10 Kg நிறையுடைய வெடிபொருட்களை தற்கொலை தாரி இடுப்பில் கட்டி இருந்து வெடிக்கச் செய்துள்ளார் என்றுள்ளது. இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் தலிபான் பிரிவான ஜமாத் உர் அர்ஹர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இச்சம்பவத்தில் குறைந்தது  25 சட்டத்தரணிகள் கொல்லப் பட்டிருக்கலாம் என ARY செய்தித் தளம் தெரிவித்துள்ளது. மேலும் மோசமான காயங்களுக்கு பலர் உள்ளாகி இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. மார்ச் 27 இல் லாகூர் குல்சான் ஏ இக்பால் பூங்காவில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து 75 பேர் கொல்லப் பட்டதை அடுத்த மோசமான தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பலுஷிஸ்டான் பகுதியில் இத்தாக்குதலில் இறந்தவர்களுக்காக 3 நாட்கள் துக்கம் அனுட்டிக்கப் படவுள்ள நிலையில் பாதுகாப்பும் நன்கு பலப் படுத்தப் பட்டு  வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்