உலகம்
Typography

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த தகவல்கள், தொழிநுட்பம் போன்றவற்றை அமெரிக்காவுக்கு இரகசியமாக வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் அந்நாட்டு அணு விஞ்ஞானியான 39 வயதுடைய ஷாரம் அமீரி இற்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக ஈரான்  ஞாயிற்றுக்கிழமை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

7 ஆண்டுகளுக்கு முன் மெக்கா சென்றிருந்த போது திடீரென காணாமற் போன இவர் பின்னர் சிஐஏ இனால் தான் கடத்தப் பட்டதாகக் கூறியதுடன் அங்கிருந்து தப்பி வந்ததாகவே கூறி வந்தார். மேலும் ஈரானில் அவருக்கு நல்ல வரவேற்பும் அளிக்கப் பட்டது. பின்னர் ஈரான் புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட இவருக்கு விசாரணை முடிவில் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப் பட்டு தற்போது  மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளமை உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவோ அமீரி சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் அமெரிக்கா வந்ததாகவும் அவர் வற்புறுத்தப் படவில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது. முன்னர் ஈரான் நாட்டின் ஹீரோவாக  பார்க்கப் பட்ட ஷாரம் அமீரி அந்நாட்டின் முதல் இரகசிய கைதியாக்கப் பட்டு கொல்லப் பட்டமை ஈரான் மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்