தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை மையமாகக்  கொண்டு வியாழன் மற்றும் வெள்ளிக்  கிழமைகளில்  நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 4 பேர் பலியாகியும் பலர் படுகாயம்  அடைந்தும் உள்ளனர். இந்தத் தாக்குதலுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை எனவும் இது உள்ளூர் நாச வேலை எனவும் தாய்லாந்து  போலிசார் தகவல் அளித்துள்ளனர். 

Read more: தாய்லாந்து சுற்றுலா மைய குண்டு வெடிப்புகளுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை!:போலிஸ்

தெற்கு பசுபிக் சமுத்திரத்தில் இந்தோனேசியாவுக்கு அண்மையில் அமைந்துள்ள சிறிய தீவு  நாடான வனௌட்டு இலிருந்து 535 Km தொலைவில் 7.2 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு மீளப் பெறப் பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது. 

Read more: இந்தோனேசியாவின் வனௌட்டு தீவு அருகே 7.2 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனா தனது கடற்படையை நிலை கொள்ளச் செய்து செயற்கைத் தீவுகளையும் கட்டமைத்து உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது அப்பிராந்தியத்தில்  உள்ள இன்னொரு நாடானா வியட்நாம் தனது புதிய ராக்கெட்டு லாஞ்சர்களை அப்பகுதியை நோக்கி நகர்த்தியிருப்பதால் தென் சீனக் கடலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Read more: தென்சீனக் கடலில் வியட்நாமின் ஆதிக்கம் : போர் பதற்றம்

உலகில் மிகப் பாரியளவில் வாழ்வியல் பிரச்சினைகளை சந்தித்து வரும் உள்நாட்டு பூர்வீகக் குடிகளுக்கு முன்னேற்றகரமான கல்வியைக் கற்க வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என சர்வதேசத்துக்கு ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட்டு 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சர்வதேச பூர்வீகக் குடிகள் தினத்தை உலகம் அனுசரித்துள்ள நிலையில் தான் ஐ.நா இந்த அழைப்பை விடுத்துள்ளது. 

Read more: உலகளாவிய பூர்வீகக் குடிகளுக்கு முன்னேற்ற கல்வி வழங்க ஐ.நா அழைப்பு

ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை  உலக யானைகள் தினமாகும். உலகில் அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப் படும் அபாயத்தில் உள்ள யானைகளது முக்கியத்துவம் மனித இனத்துக்கும் அவசியமான ஒன்றே ஆகும். ஏன் இந்த யானைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு 10 காரணங்களை இந்தியாவின் மதுராவில் உள்ள யானைகள் காப்பகமான Wildlife SOS தெரிவித்துள்ளது. அவற்றைப் பார்ப்போம்.

Read more: யானைகளைப் பாதுகாப்பது அவசியம்

சிரியாவின் அலெப்போ போரை  நிறுத்துவதில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மேற்கொண்ட யுத்த நிறுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதுடன் அலெப்போ நகர் மீது அரச படைகள் பாரிய முற்றுகைப் போரை மேற்கொண்டுள்ளன.

Read more: சிரியாவில் அவலம்!:அலெப்போ முற்றுகையில் 20 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர்

செவ்வாய்க்கிழமை இரவு ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் பிரேசிலின் தலைநகர் ரியோ டீ ஜெனீரோவில் பத்திரிகையாளர் சென்று கொண்டிருந்த பேருந்து  ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Read more: பிரேசிலில் பத்திரிகையாளர் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்