ஞாயிற்றுக்கிழமை வடக்கு பாகிஸ்தானின் சிட்ரால் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியில் பெய்த கடும் பனிப்பொழிவை அடுத்து ஏற்பட்ட பனிச்சரிவில் 5 வீடுகள் மூழ்கடிக்கப் பட்டதுடன் கிட்டத்தட்ட 14 பேர் இதில் சிக்கிப் பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. சிட்ரால் மாவட்ட ஸ்கௌட்ஸ் கமாண்டர் கொலோனல் நிஷாமுடின் ஷாஹ் இது குறித்துத் தகவல் அளித்துள்ளார்.

Read more: வடக்கு பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 14 பேர் பலி

 2011 ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தாலும் சுனாமி அலைகளாலும் கடுமையாகப் பாதிக்கப் பட்ட ஃபுக்குஷிமா அணு உலையில் முன்பு எப்போதும் இல்லாதளவு கதிர் வீச்சின் (Radiation) அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் ரியாக்டருக்கு அண்மையில் அதனைக் கண்காணிக்கக் கூடிய ரோபோ கமெராக்களையே உருக வைக்கும் அளவுக்கு அவை இருப்பதாகவும் ஜப்பான் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read more: 2011 சுனாமியால் பாதிக்கப் பட்ட ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலையில் கதிர் வீச்சின் அளவு மிக அதிக அளவில்..

 

கடந்த வாரம் ஈரான் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதன் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் சீனா, லெபனான் ஐக்கிய அரபு  இராச்சியம் போன்ற நாடுகளில் உள்ள ஈரான் ஆயுதம் கொள்வனவு செய்யும் 12 நிறுவனங்கள் மற்றும் 13 நபர்கள் மீது தடை உத்தரவையும் பிறப்பித்து இருந்தார்.

Read more: அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக ஏவுகணைகளைக் காட்சிப் படுத்தவுள்ள ஈரான்

பாகிஸ்தான், ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய 5 நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு வருபவர்களுக்கான விசாவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குவைத்.

Read more: அமெரிக்காவை பின்பற்றும் குவைத் : 5 முஸ்லிம் நாடுகளுக்கான விசாவுக்குத் தடை விதித்தது

ஆப்கானின் முன்னால் யுத்தத் தளபதியான (warloard) குல்புடின் ஹெக்மத்யார் என்பவரின் பெயரை ISIS மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கான தடைப் பட்டியலில் இருந்து ஐ.நா நீக்கம் செய்துள்ளது. வெள்ளிக்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபை வெளியிட்ட அறிக்கையில், ஹெஷ்ப் ஈ இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவரான ஹெக்மத்யாரின் பெயர் தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப் பட்டிருப்பதாகவும் இனிமேல் அவரது சொத்துக்கள் முடக்கம் செய்யப் பட மாட்டாது என்பதுடன் அவருக்குப் போக்குவரத்துத் தடையும் நீக்கம் செய்யப் பட்டு ஆயுதங்கள் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டும் ரத்து செய்யப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: முன்னால் ஆப்கான் யுத்தத் தளபதியான குல்புடின் ஹெக்மத்யார் இனது பெயரை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியது ஐ.நா

அதிபர் டொனால்டு டிரம்ப் விசா தடை உத்தரவால் 4 மாத குழந்தையின் இதய ஆபரேஷன் பாதிக்கப்பட்டு உள்ளது. 

Read more: டொனால்டு டிரம்ப் விசா தடை உத்தரவால் 4 மாத குழந்தையின் இதய ஆபரேஷன் பாதிக்கப்பட்டு உள்ளது

புதன்கிழமை வெஸ்ட் பேங்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள குடியேறிகளை மெல்ல மெல்ல வெளியேற்றும் ஆப்பரேஷனை ஆரம்பித்துள்ளன இஸ்ரேல் படைகள். இக்குடியேறிகளின் திட்டமிடப் பட்ட அழிப்பானது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் குறுகிய கூட்டணியைப் பாதிப்பதாகவும் அவரது கூட்டணியில் உள்ள கடும் தேசியவாதிகள் இக்குடியேறிகள் மீளக் குடியமர்த்தலை ஆதரிப்பவர்களாகவும் இருக்கும் நிலையில் இந்த ஆப்பரேஷன் முன்னெடுக்க படுகின்றது.

Read more: வெஸ்ட் பேங் புறநகர்ப் பகுதியில் இருந்து குடியேறிகளை வெளியேற்றத் தொடங்கியது இஸ்ரேல்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்