ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 47 நாடுகளில் 14 நாடுகளின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதனால் புதிய உறுப்பு நாடுகளைத் தேர்வு செய்யும் ரகசிய வாக்கெடுப்பு நியூயோர்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது.

Read more: ஐ.நா மனித உரிமைகள் பிரிவில் இருந்து ரஷ்யா வெளியேறுகின்றது

ஜூலை மாதம் துருக்கியில் முறியடிக்கப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பை தலைமை தாங்கியதாகக் கருதப் படும் அமெரிக்காவில் வசிக்கும் ஃபெதுல்லா குலென் என்ற மதகுருவுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுகின்றார்கள் என்றும் தீவிரவாத குழுக்கள் சிலவற்றுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் கிட்டத்தட்ட 15 ஊடகங்களை துருக்கி அரசு இழுத்து மூடியுள்ளதுடன் மேலதிகமாக 10 000 பொது மக்கள் சேவையாளர்களைப் பதவி நீக்கம் செய்தும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read more: 10 000 மேலதிக சிவில் சேர்வையாளர்களைப் பதவி நீக்கி மீடியா மீதும் தடை விதித்தது துருக்கி அரசு

பிரான்ஸின் பாரிய அகதி முகாமான Calais Jungle இல் கடந்த சில நாட்களாகப் பகுதி பகுதியாகக் கலைக்கப் பட்டு வரும் நிலையில் கடந்த வியாழக்கிழமை சுமார் 100 சிறுவர்களுக்கு தங்குவதற்கு உரிய இடத்தை ஏற்படுத்தித் தர அதிகாரிகள் தவறிய காரணத்தால் அச்சிறுவர்கள் இரவு முழுதும் மிகவும் சேதமடைந்த கலே முகாமிலேயே மீள அழைக்கப் பட்டு தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

Read more: மிகவும் சேதமடைந்த Calais Jungle முகாமில் தவிக்க விடப்பட்ட சிறுவர்கள்

பனி யுத்தத்துக்குப் (Cold War) பின்னர் முதன் முறையாக போலந்தில் உள்ள ரஷ்ய எல்லைகளில் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி,  கனடா ஆகியவை தமது போர் விமானங்களையும், யுத்த டேங்கிகளையும் ஆர்ட்டிலரி மற்றும்  படை வீரர்களையும் அனுப்பவுள்ளன.

Read more: போலந்தை நோக்கி படை நகர்வை மேற்கொள்ளவிருக்கும் நேட்டோ (NATO) : ரஷ்யா அதிருப்தியில்

உலக அணு வல்லரசுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வியாழக்கிழமை ஐ.நா பொதுச் சபையில் அணுவாயுதங்களைத் தடை செய்வதற்கான புதிய ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

Read more: அணுவாயுதங்களைத் தடை செய்வதற்கான புதிய ஒப்பந்தம் தொடர்பில் ஐ.நா இல் வாக்கெடுப்பு

பாகிஸ்தானில் மிக மோசமாக மன நிலை பாதிக்கப் பட்ட நபர் ஒருவருக்கு அரசு மரண தண்டனை அளிக்கும் திட்டத்தில் உள்ளது. இம்முடிவை  அங்கிருக்கும் மனித உரிமை அமைப்புக்கள் தீவிரமாகக் கண்டித்து வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் 2 ஆம் திகதி  முதல் paranoid schizophrenia என்ற  தீவிரமான மன நோயால் பாதிக்கப் பட்ட இம்டாட் அலி என்ற நபருக்கு பிளாக் வாரண்டு அளிக்கப் பட்டுள்ளதாகவும் இவர் தூக்கிலிடப் படும் முடிவு உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Read more: மிக மோசமாக மனநிலை பாதிக்கப் பட்ட நபருக்கு மரண தண்டனை அளிக்கும் திட்டத்தில் பாகிஸ்தான்?

ஆகஸ்ட்டில் கிட்டத்தட்ட 300 பேர் பலியாகக்  காரணமாக இருந்த நிலநடுக்கம் இத்தாலியில் தாக்கிய இடத்தில் இருந்து வடக்கே 50 மைல் தொலைவில் மையம் கொண்டு மத்திய இத்தாலியை புதன்கிழமை இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. இந்த நிலநடுக்கங்களால் கட்டடங்களும் தேவாலயங்கள் சிலவும் சேதமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொடர் அதிர்வுகளால் பீதியடைந்துள்ள மக்கள் தமது வதிவிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் குவிந்துள்ளனர்.

Read more: மத்திய இத்தாலியைத் தாக்கிய இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்:தொடர் அதிர்வுகளால் மக்கள் பீதி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்