சுவிட்ஸர்லாந்து சொலத்தூண் நகரில் ஈழத் தமிழர்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.  நேற்று முன்தினம்  சொலத்தூண் புகையிரத நிலையப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

Read more: சுவிஸ் தமிழர்களின் மோதல்-துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி !

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி சுர்ஜித்சிங்கை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more: பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் உத்தரவு!

செப்டம்பரில் தனது 5 ஆவது அணுவாயுதப் பரிசோதனையை வட கொரியா மேற்கொண்டதை அடுத்து அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து அடுத்த மாதம் போர் ஒத்திகையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியா தொடர்ச்சியாக அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததுடன் தேவைப் பட்டால் அமெரிக்கா மீதும் தென்கொரியா மீதும் அணுவாயுதத் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம்  என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

Read more: போர் ஒத்திகையில் ஈடுபடவுள்ள அமெரிக்காவும் தென்கொரியாவும்

மக்கள் நிம்மதியாகவும், குதூகலமாகவும், சந்தோஷமாகவும் வாழ விரும்பும் நகரங்களில் லண்டன் முதலிடம் பெற்றுள்ளது. 

Read more: மக்கள் வாழ விரும்பும் நகரங்களில் லண்டன் முதலிடம்!

இன்று புதன்கிழமை ஐ.நா சபை வெளியிட்ட அறிக்கையில் மத்திய தரைக் கடலை கடந்து ஐரோப்பாவை அடைய முயன்ற சுமார் 3800 அகதிகள் நீரில் மூழ்கிப் பலியாகி இருப்பதாகவும் இதுவே கடந்த வருடங்களில் இதுவரை நடந்த விபத்துக்களில் மிக அதிகபட்ச உயிரிழப்பு என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: இவ்வருடம் மத்திய தரைக் கடல் படகு விபத்துக்களில் 3800 அகதிகள் பலி: ஐ.நா

உலக நாடுகளில் தொழில் தொடங்க சிறந்த நாடு என்ற பெருமையை உலக வங்கி நியூசிலாந்துக்கு வழங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டு தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் என்ற உலக வங்கி வெளியிட்ட பட்டியலில் 10 வருடங்களாக முதலாம் இடத்தில் இருந்த சிங்கப்பூரை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more: நியூசிலாந்தை தொழில் தொடங்க சிறந்த நாடாக உலக வங்கி அறிவிப்பு!

அமெரிக்காவின் முன்னால் இராஜதந்திரிகள் அடங்கிய குழு ஒன்றிட்கும் வடகொரியாவின் அரச அதிகாரிகளுக்கும் இடையே மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இரு நாட்களுக்கு அதிகார பூர்வமற்ற சந்திப்பு ஒன்று மூடிய கதவுகளுக்கிடையே இடம்பெற்றுள்ளது.

Read more: மலேசியாவில் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்