2012 ஆம் ஆண்டு மத்தியில் இருந்து விக்கிலீக்ஸ் இணையத் தாபகரான ஜூலியன் அசாஞ்சே தென்னமெரிக்க நாடான எக்குவடோரின் இலண்டன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அண்மையில் இவரது இணையப் பாவனைக்குத் தீவிர தடைகளை விதித்திருப்பதாக செவ்வாய்க்கிழமை எக்குவடோர் அரசு அறிவித்துள்ளது.

Read more: விக்கிலீக்ஸ் தாபகர் ஜூலியன் அசாஞ்சேயின் இணையப் பாவனை முடக்கம்! : எக்குவடோர் தெரிவிப்பு

திங்கட்கிழமை திபேத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா செக் குடியரசின் தலைநகர் ப்ராகுவே இற்கு விஜயம் செய்திருந்தார்.  இதைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க் கிழமை தலாய் லாமாக்கு அழைப்பு விடுத்ததன் விளைவாக சீன அரசுக்கு ஏற்படக் கூடிய கோபத்தைத் தணிப்பதற்கென செக் குடியரசு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Read more: செக் குடியரசுக்கு தலாய் லாமா விஜயம் : சீனாவின் கோபத்தை தவிர்க்க அரசு முயற்சி

ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசூலை ISIS இடமிருந்து மீட்கும் தாக்குதல் அந்நாட்டு இராணுவம் மற்றும் குர்து பேஷ்மெர்கா படையினர் தலைமையில் 2 ஆவது நாளாகத் தீவிரம் அடைந்துள்ளது.

Read more: ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசூலை கைப்பற்றும் தாக்குதல் தீவிரம்

நைஜீரிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக 2 வருடங்களுக்கு முன்னர் சிபோக் நகரில் போக்கோ ஹராம் போராளிகள் கடத்திய 200 இற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளில் மேலும் 21 பேர் விடுவிக்கப் பட்டுள்ளதுடன் குறித்த மாணவிகள் தமது குடும்பத்தினருடன் இணைக்கவும் பட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளதாக USA Today பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Read more: 2 வருடங்களுக்கு முன் போக்கோ ஹராம் கடத்திய 200 பள்ளி மாணவிகளில் மேலும் 21 பேர் விடுதலை

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரிலுள்ள தொழிநுட்பக் கல்லூரி ஒன்றுக்கு வெளியே வாகனத் தரிப்பிடத்தில் கருப்புச் சட்டை அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்ததுடன் இதில் ஒரு மாணவியின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Read more: சான் பிரான்ஸிஸ்கோ கல்லூரிக்கு வெளியே 4 மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

மியான்மாரின் சிண்டி நதியில் அளவுக்கு மீறிய மக்களுடன் சென்ற படகு சனிக்கிழமை நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியதில் 100  பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. 240 அல்லது 250 பேருடன் பயணித்த இந்த படகில் அது கொள்ளத் தக்க அளவை விட 100 பேர் அதிகமாகப் பயணித்ததாகவும் பல மோட்டார் சைக்கிள்களுடனும் மிகப் பாரமான பொதிகளுடனும் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

Read more: மியான்மார் படகு விபத்தில் 100 பேர் பலி என அச்சம் : தைஃபூன் சரிக்கா புயலுக்கு 24 பேர் பலி

 பிரேசிலின் ரோராய்மா மாநிலத்தில் போவா விஸ்ட்டா நகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இரு கோஷ்டிகளுக்கிடையே மூண்ட வன்முறையில் 25 பேர் படுகொலை செய்யப் பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வன்முறையின் போது 6 பேர் எரித்துக் கொல்லப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Read more: பிரேசில் சிறையில் வெடித்த வன்முறையில் 25 பேர் படுகொலை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்