மியான்மாரின் சிண்டி நதியில் அளவுக்கு மீறிய மக்களுடன் சென்ற படகு சனிக்கிழமை நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியதில் 100  பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. 240 அல்லது 250 பேருடன் பயணித்த இந்த படகில் அது கொள்ளத் தக்க அளவை விட 100 பேர் அதிகமாகப் பயணித்ததாகவும் பல மோட்டார் சைக்கிள்களுடனும் மிகப் பாரமான பொதிகளுடனும் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

Read more: மியான்மார் படகு விபத்தில் 100 பேர் பலி என அச்சம் : தைஃபூன் சரிக்கா புயலுக்கு 24 பேர் பலி

நைஜீரிய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக 2 வருடங்களுக்கு முன்னர் சிபோக் நகரில் போக்கோ ஹராம் போராளிகள் கடத்திய 200 இற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளில் மேலும் 21 பேர் விடுவிக்கப் பட்டுள்ளதுடன் குறித்த மாணவிகள் தமது குடும்பத்தினருடன் இணைக்கவும் பட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளதாக USA Today பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Read more: 2 வருடங்களுக்கு முன் போக்கோ ஹராம் கடத்திய 200 பள்ளி மாணவிகளில் மேலும் 21 பேர் விடுதலை

எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி  அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வரும் தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் சமீபத்தில் இந்தியாவுக்கு திடீர் ஆதரவளித்து பேசியுள்ளார். அதாவது தான் அதிபரானால் இந்தியாவும் அமெரிக்காவும் இன்னும் நெருங்கிய நட்பு நாடுகளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read more: டிரம்பின் திடீர் இந்திய ஆதரவு!:மேடைப் பேச்சில் ஒபாமா கடும் சாடல்

இன்று அக்டோபர் - 14 உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சந்தையில் விற்கப்படும் பொருட்கள் தரமானது தான் என்று சான்றளிக்கும் நிறுவனங்களான ISO,IEC,ITU ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து 1969 ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் மாதம் 14 ஆம் திகதியை உலக தர நிர்ணய தினமாக கடைபிடித்து வருகின்றன.

Read more: இன்று அக்டோபர் - 14 உலக தர நிர்ணய தினம்

 பிரேசிலின் ரோராய்மா மாநிலத்தில் போவா விஸ்ட்டா நகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இரு கோஷ்டிகளுக்கிடையே மூண்ட வன்முறையில் 25 பேர் படுகொலை செய்யப் பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வன்முறையின் போது 6 பேர் எரித்துக் கொல்லப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Read more: பிரேசில் சிறையில் வெடித்த வன்முறையில் 25 பேர் படுகொலை

சிரியாவிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரான டாபிக் இனை ISIS போராளிகளிடம் இருந்து சிரிய கிளர்ச்சிப் படை மீட்டுள்ளது. சிரியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள இந்நகரையும் அருகிலுள்ள சோரான் என்ற கிராமத்தையும் துருக்கி படைகளின் துணையுடன் கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Read more: சிரியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க டாபிக் நகரை இழந்தது ISIS

உலகின் மிக நீண்ட காலம் மன்னராக ஆட்சி புரிந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் இன்று  வியாழக்கிழமை காலமாகி உள்ளார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த பூமிபால் மறையும் போது அவரது வயது 88 ஆகும். சமீப காலமாகவே உடல் நலக் குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சைப் பலன் இன்றி மரணமடைந்ததை அடுத்து தாய்லாந்து மக்கள் கடும் சோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

Read more: உலகின் மிக நீண்ட காலம் மன்னராக ஆட்சி புரிந்த தாய்லாந்தின் பூமிபால் மறைவு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்