துருக்கி தனது சிறைகளில் உள்ள 38 000 கைதிகளை அவர்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆயினும் கொலை, தீவிரவாதம் மற்றும் பாலியல் குற்றம் போன்ற மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு விடுதலை அளிக்கப் படாது எனவும்  அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: சுமார் 38 000 கைதிகளை பரோலில் விடுவிக்க துருக்கி திட்டம்

ஐ.நா பொதுச் சபை தாபிக்கப் பட்டதில் இருந்து இதுவரை  8 ஆண்களே பொதுச் செயலாளர்களாகக் கடமை ஆற்றி வந்துள்ளனர் என்றும் இனி இப்பதவிக்கு பெண் ஒருவர் வருவதே சரியான நேரம் எனவும் தற்போதைய ஐ.நா பொதுச் செயலாளர்  பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.  

Read more: அடுத்த ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் வருவதை விரும்புகின்றேன் : பான் கீ மூன்

நேபாலில் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 33 பேர் பலியாகியும் 43 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

Read more: நேபால் பஸ் விபத்தில் 33 பேர் பலி

தெற்கு பசுபிக் சமுத்திரத்தில் இந்தோனேசியாவுக்கு அண்மையில் அமைந்துள்ள சிறிய தீவு  நாடான வனௌட்டு இலிருந்து 535 Km தொலைவில் 7.2 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு மீளப் பெறப் பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது. 

Read more: இந்தோனேசியாவின் வனௌட்டு தீவு அருகே 7.2 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பெரு  நாட்டைத் தாக்கிய 5.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி உட்பட 4 பேர் கொல்லப்  பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஞாயிறு இரவு தாக்கிய இந்நிலநடுக்கம் காரணமாக செப்பு உற்பத்தி செய்யும் பகுதி பாதிக்கப் பட்டுள்ளது.

Read more: பெருவில் வலிமையான நிலநடுக்கம் , அமெரிக்காவில் வெள்ளம், ஜப்பானை நோக்கி வரும் சாந்த்து புயல்!

தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை மையமாகக்  கொண்டு வியாழன் மற்றும் வெள்ளிக்  கிழமைகளில்  நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 4 பேர் பலியாகியும் பலர் படுகாயம்  அடைந்தும் உள்ளனர். இந்தத் தாக்குதலுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை எனவும் இது உள்ளூர் நாச வேலை எனவும் தாய்லாந்து  போலிசார் தகவல் அளித்துள்ளனர். 

Read more: தாய்லாந்து சுற்றுலா மைய குண்டு வெடிப்புகளுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை!:போலிஸ்

ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை  உலக யானைகள் தினமாகும். உலகில் அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப் படும் அபாயத்தில் உள்ள யானைகளது முக்கியத்துவம் மனித இனத்துக்கும் அவசியமான ஒன்றே ஆகும். ஏன் இந்த யானைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு 10 காரணங்களை இந்தியாவின் மதுராவில் உள்ள யானைகள் காப்பகமான Wildlife SOS தெரிவித்துள்ளது. அவற்றைப் பார்ப்போம்.

Read more: யானைகளைப் பாதுகாப்பது அவசியம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்