இன்று காலை லிபியாவில் இருந்து புறப்பட்ட ஆஃப்ரிகியாஹ் ஏர்வேஸ் இற்கு சொந்தமான விமானம் அங்கிருந்து மால்ட்டாவுக்கு மர்ம நபர்களால் கடத்தப் பட்டது. மேலும் மால்ட்டாவில் இவ்விமானம் சில நிபந்தனைகளுடன் தரையிறக்கப் பட்டது.

Read more: லிபிய விமானக் கடத்தல் காரர்கள் சரணடைவு : அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக விடுதலை

அண்மையில் ஊடகப் பேட்டி ஒன்றின் போது துருக்கியிலும் ஜேர்மனியின் பேர்லின் நகரிலும் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களைக் கண்டித்த அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் தான் முஸ்லிம்கள் குறித்து தெரிவித்திருந்த கொள்கைகள் இத்தாக்குதல்கள் மூலம் 100% வீதம் சரியானவை என்றே நிரூபணமாகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Read more: துருக்கியிலும் ஜேர்மனியிலும் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களைக் கண்டித்த டிரம்ப் : இஸ்லாமியர்களுக்கு எதிரான அவரது கொள்கையில் தீவிரம்

சீனாவின் தலைநகர் பீஜிங் உட்பட பல முக்கிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வளி மாசடைவு அபாயகர மட்டத்தை எட்டியதால் அங்கு அதிகபட்ச எச்சரிக்கையான சிவப்பு நிற அபாய எச்சரிக்கை விதிக்கப் பட்டது.

Read more: பீஜிங்கில் வளி மாசடைவால் விதிக்கப் பட்ட சிவப்பு எச்சரிக்கை நீக்கம்

கொங்கோவில் அதிபர் ஜோசெஃப் கபிலா பதவி விலக வேண்டும் எனக் கோரி கின்ஷாஷா உட்பட சில நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்கள் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படை துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 26 பேர் கொல்லப் பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பக ஆய்வாளர் இடா சாவ்யெர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் கொங்கோவில் பதற்றம் நிலவுகின்றது.

Read more: அதிபர் ஜோசெஃப் கபிலா இற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 26 பேர் சுட்டுக் கொலை! : கொங்கோவில் பதற்றம்

சிரியாவின் கிழக்கு அலெப்போ பகுதியில் இருந்து இறுதி மக்கள் மற்றும் கிளர்ச்சிப் படை அடங்கிய குழு இன்னும் சில மணித்தியாலங்களுக்குள் பூரணமாக வெளியேற்றப் படவுள்ளனர்.

Read more: இன்னும் சில மணித்தியாலங்களில் அலெப்போவில் இருந்து இறுதி மக்கள் குழுவும் வெளியேற்றம்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் விடுமுறை தினத்தின் போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தத்  திட்டமிட்டிருந்த 3 சந்தேகத்துக்குரிய போராளிகளை அந்நாட்டுப் போலிசார் புதன்கிழமை துப்பாக்கிச் சண்டையின் போது சுட்டுக் கொன்றுள்ளனர். கடந்த இரு வாரங்களில் இவ்வாறு தடுக்கப் பட்ட இரண்டாவது முக்கிய தாக்குதல் சதி இதுவென இந்தோனேசியா அறிவித்துள்ளது.

Read more: இந்தோனேசியாவில் தற்கொலைத் தாக்குதல் முறியடிப்பு : 3 போராளிகள் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் அண்ட்ரெய் கார்லோவ் துருக்கியின் அங்காரா நகரில் போட்டோ கண்காட்சி ஒன்றில் வைத்து ஊடகங்களுக்கு முன்னால் நேரடியாக சுட்டுக் கொல்லப்  பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திய அங்காராவின் போலிஸ் ரியொட் ஸ்குவாட் இனை சேர்ந்த மெவ்லுட் மேர்ட் அல்டிண்டாஸ் என்பவரும் பின்னர் போலிஸ் வேட்டையில் சுட்டுக் கொல்லப் பட்டிருந்தார்.

Read more: துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப் பட்டதை அடுத்து சிரியாவுடன் துருக்கி, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை புதிய ஒப்பந்தம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்