அண்மையில் நெதர்லாந்தில் வளர்க்கப் பட்டு வந்த இலட்சக் கணக்கான வாத்துக்களுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டு அவை அழிக்கப் பட்டிருந்தன.
பெண்கள் வாகனம் ஓட்ட மறுக்கும் சட்டம் சவுதியின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு! : சவுதி இளவரசர் கருத்து
சவுதி அரேபியாவில் கடந்த பல ஆண்டுகளாகப் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தடைச் சட்டம் நிலவி வருகின்றது. இந்நிலையில் அண்மையில் சவுதி நாட்டின் இளவரசரும் கோடீஸ்வரருமான அல்வலீட் பின் தலாட் இதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க 190 000 வாத்துக்கள் அழிக்கப் பட்டன
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு மேற்கே 70 km தொலைவில் அமைந்துள்ள பிடிங்குஸன் என்ற கிராமத்தில் உள்ள வாத்துப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது கண்டறியப் பட்டதை அடுத்து அங்கு 1 km சுற்றளவிலுள்ள 2 பண்ணைகளில் இருந்து 190 000 வாத்துக்கள் அழிக்கப் பட்டுள்ளன.
பிரேசிலின் உதைப்பந்தாட்ட கிளப் வீரர்களுடன் சென்ற விமானம் விபத்து! : 76 பேர் பலி
திங்கட்கிழமை மாலை அளவில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட கிளப் வீரர்களுடன் சென்ற விமானம் ஒன்று கொலம்பிய நாட்டிலுள்ள மலைகளில் மோதி விபத்தில் சிக்கியதில் 76 பேர் கொல்லப் பட்டதாகவும் 5 பேர் உயிருடன் மீட்கப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
பல ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற கியூபாவின் மறைந்த தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலம்
மறைந்த கியூபாவின் புரட்சித் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் இறுதி ஊர்வலம் நேற்று புதன் கிழமை தலைநகர் ஹவானாவில் ஆரம்பித்து தொடர்ந்து 4 நாட்களாக இடம்பெற்று இறுதியில் கிழக்கு நகரான சாண்டியாகோவில் அவரின் சடலம் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது. நேற்றைய ஊர்வலத்திலேயே பெருந் திரளான மக்கள் ஆயிரக் கணக்கில் பங்கேற்றுக் கொண்டனர்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹே பதவி விலகப் போவதாக அறிவிப்பு
அண்மைக் காலமாக ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி வரும் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹே தான் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
கொலம்பியா விமான விபத்து - 75 பேர் பலி
பொலிவியாவிலிருந்து கொலம்பியா நோக்கியப் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று திங்கட்கிழமை இரவு கொலம்பியாவின் மெடெலின் நகருக்குச் சமீபமாக விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் பலியாகியுள்ளார்கள்.