2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய கல்வி மட்டத்தை  அடைவதற்கு தெற்கு ஆசியாவுக்கு 15 மில்லியன் புதிய ஆசிரியர்கள் தேவைப் படுவர் என புதிதாக வெளியிடப் பட்ட ஓர் அறிக்கையில் ஐ.நா இன் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. ஆக்டோபர் 5 ஆம் திகதி உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த அறிக்கையில் உலகளாவிய ரீதியில் 69 மில்லியன் புதிய ஆசிரியர்கள் இன்னும் 14 வருடங்களுக்குள் தேவைப் படுவர் என்றும் கணிப்பு கூறப்பட்டுள்ளது.

Read more: 2030 ஆம் ஆண்டளவில் தெற்கு ஆசியாவுக்கு 15 மில்லியன் புதிய ஆசிரியர்கள் தேவைப் படும்!:ஐ.நா

வியாழக்கிழமை வடகிழக்கு கென்யாவின் மண்டேரா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சோமாலியாவைச் சேர்ந்த இஸ்லாமிய போராளிக் குழுவான அல் ஷபாப் தொடுத்த தாக்குதலில் 6 கிறித்தவர்கள் கொல்லப் பட்டுள்ளதாக அவர்களின் டெலிகிராம் கணக்கில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பூர்வீக சோமாலிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கென்யாவின் இப்பகுதியில் நன்கு திட்டமிடப் பட்டே அல் ஷபாப் இத்தாக்குதலைத் தொடுத்ததாகவும் வியாழக்கிழமை காலை இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிய வருகின்றது.

Read more: கென்யாவில் கிறித்தவர்கள் மீது அல் ஷபாப் போராளிக் குழு தாக்குதல்: 6 பேர் பலி

பாகிஸ்தான் போரை விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறது என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். 

Read more: பாகிஸ்தான் போரை விரும்பவில்லை; அமைதியையே விரும்புகிறது: நவாஸ் ஷெரீப்

2016 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு நேனோ மூலக்கூறு இயந்திரங்களை (Nano molecuar machines) வடிவமைத்த  அல்லது  ஒருங்கிணைத்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப் படவுள்ளதாக சுவீடனின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

Read more: நேனோ மூலக்கூறு இயந்திரங்களை வடிவமைத்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!

தென்கிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளை முக்கியமாக புளோரிடா மாநிலத்தை நாளை காலை தீவிரம் அடைந்து வரும் மேத்யூ ஹரிக்கேன் புயல் மிக வலிமையாகத் தாக்கவுள்ளதாகவும் இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 15 இலட்சம்  மக்களை உடனடியாக வெளியேறும் படி புளோரிடா கவர்னர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Read more: தென்கிழக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைத் தாக்க வரும் மேத்யூ புயல்!

அண்டை நாடான சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்ம புத்திராவின் கிளை நதியை தடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்ம புத்திராவின் கிளை நதியை தடுத்துள்ளது!

ஐ.நா பாதுகாப்பு சபை மிக விரைவாக எடுத்த ஒரு முடிவின் பிரகாரம் முன்னால் போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ரெஸ் 2017 தொடக்கம் முதல் பான் கீ மூனுக்குப் பதிலாக புதிய பொதுச் செயலாளராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு சபையைச் சேர்ந்த 15 தூதுவர்களும் சுமார் ஒரு தசாப்த காலமாக ஐ.நா இன் அகதிகளுக்கான உயர் அதிகாரியாக கடமையாற்றிய அந்தோனியோவை ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

Read more: ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்லின் அந்தோனியோ குட்டெர்ரெஸ் தேர்வு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்